ஏக்கத்துடன் முதுமை

சுட்டெரிக்கும்  வெயில்
பதற்றத்துக்கும் ,பரபரப்புக்கும்
பேர் போன அந்த தேனாம்பேட்டை சிக்னல் ,
பேருந்துகளின் இரைச்சல் சத்தம் 120௦ டெசிபல்
சாலையோரத்தில்
சரித்திரம் படைத்தவரின் பெயரின் உள்ள
நிழற்குடையில்
நான்கைந்து இளைஞர்கள்  ஆரவாரத்துடன்…
முரண்பாடாக
முதுமையில் முற்றிய ,
கைரேகைகள் உடல் முழுவதும் பரவி கிடக்க
ஊன்றுகோலை தோழனாக கொண்டு,
தேனாம்பேட்டை ஆலையம்மன்
மஞ்சள் பையினை கக்கத்தில் கொண்டு,
மூக்கு கண்ணாடி மூக்கில் நிலைகொள்ளாமல் ,
முகத்தை சுருக்கி நிற்கவைத்துகொண்டு…
முன்னும் பின்னும் பார்த்து ..
கடந்த ஒரு மணி   நேரமாக ,
ஒவ்வொரு மானிட பதற்றுகளிடம்
உதவி கேட்டு,
ஏமாந்து போன அந்த கிழவர்
ஐந்து வயது சிறு பிள்ளை பிச்சை
பாத்திரத்துடன் சாலையை கடந்து செல்வதை
ஏக்கத்துடன் பார்க்க…………..
– சுதா
மலேசியா
Advertisements

1 Comment

Filed under Uncategorized

பிறப்பால் தமிழன் ….

என் தாத்தா , நிலத்தை தோண்டிய போது தங்கம் கிடைத்தது

என் தந்தை தோண்டிய போது நீர் கிடைத்தது

நான் தோண்டிய போது கண்ணி வெடிகள்  கிடைத்தது

என் மகன் தோண்டும் போது எலும்புக்கூடுகள் கிடைக்கும்

தமிழனாய் பிறந்ததை தவிர என்ன தவறு செய்தோம்

இளந்திரையன்

Leave a comment

Filed under கவிதை, Uncategorized

நெனப்பு

அவசரத்தில் மறக்கப்பட்ட பேனா
சிறிது மட்டும் வயிற்றுக்கு ஈயப்பட்ட உணவு
வாகன இரைச்சல்
வாங்க மறந்த சில்லரை பாக்கி
என்றுமே அங்கீகரிக்கப்படாத  அலுவலக உழைப்பு
. . .
. . .
இந்த இயந்திர வாழ்க்கையை அசை போடுகையில்
மனதை பசுமையாக்கும்
முதியவர் சாலை கடப்பதற்காய் உதவிய நினைவு . . .

1 Comment

Filed under கவிதை